கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா அரைசதம்: மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் திணறல்

Last Modified புதன், 18 டிசம்பர் 2019 (15:12 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களத்தில் இறங்கி மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். சற்றுமுன் வரை இந்திய அணி 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 126 ரன்களை குவித்துள்ளது. ரோகித் சர்மா 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 54 ரன்களும், கேஎல் ராகுல் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து 69 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்

மேற்கு இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்த திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து தொடரை வெல்ல வேண்டுமானால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :