தொடர்புடைய செய்திகள்
- இந்த அரைசதத்துக்காக என் மகள்கள் சந்தோஷப் படமாட்டார்கள்…. வார்னர் பகிர்ந்த தகவல்!
- ஐபிஎல்-2022; டெல்லி கேப்பிட்டல்ஸ் சூப்பர் வெற்றி
- மீண்டும் கேப்டனாக களத்தில் கோலி…. ரசிகர்கள் ஆரவாரம்!
- பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு வெற்றி: லக்னோ போராடி தோல்வி!
- அந்த வீரர் கண்டிப்பாக இந்திய அணிக்காக விளையாடுவார்: கவாஸ்கர்
பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்கள்! – வார்னரின் சிறப்பான சாதனை!
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் வீழ்த்திய டேவிட் வார்னர் புதிய சாதனையை படைத்துள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய டெல்லி அணி 10 ஓவர்களிலேயே 119 ரன்களை குவித்து வெற்றியை தட்டி சென்றது.
இந்த போட்டியில் டேவிட் வார்னர் 56வது அரைசதம் வீழ்த்தினார். முன்னதாக சன் ரைசர்ஸ் அணியில் இருந்தபோதும், தற்போது டெல்லி அணியில் இருக்கும்போதும் மொத்தமாக தனிநபராக பஞ்சாப் அணிக்கு எதிராக இதுவரை டேவிட் வார்னர் 1005 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக 936 ரன்களை குவித்துள்ளார். இந்த போட்டியில் அவர் விளாசிய அரைசதம் தொடர்ந்து மூன்றாவது அரைசதம் ஆகும்.
அடுத்த கட்டுரையில்