மீண்டும் கேப்டனாக களத்தில் கோலி…. ரசிகர்கள் ஆரவாரம்!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சிறிது நேரம் கேப்டனாக செயல்பட்டார் கோலி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 31 ஆவது ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது.
இதில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணியின் கேப்டன் டு பிளஸ்சி 96 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பெங்களூர் அணி பீல்ட் செய்த வந்த போது டூ பிளஸ்சி சிறிது தாமதமாக களத்துக்கு வந்தார். அதனால் அவருக்கு பதிலாக கோலி சில ஓவர்கள் கேப்டனாக செயல்பட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தனர்.