1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:51 IST)

இந்த அரைசதத்துக்காக என் மகள்கள் சந்தோஷப் படமாட்டார்கள்…. வார்னர் பகிர்ந்த தகவல்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று பஞ்சாப்பை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார் இதனை அடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தார். இதில், அகவர்வால் 24 ரன்களும், தவான் 9 ரன்களும், பரிஸ்டோ 9 ரன்களும்,,சர்மமா 32 ரன்களும்,  ஷாருக்கான் 13 ரன்களும்,,  அடுத்துள்ளனர், 20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 116 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியி, டேவிட்  வார்னர் 60 ரன்களும், பிரித்வி ஷா 41 ரன்களும், கான் 12 ரன்களும்  அடித்தனர். இந்த போட்டிக்குப் பின் பேசிய டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் “இந்த அரைசதத்தால் எனது இரு மகள்களும் சந்தோஷமடைய மாட்டார்கள். அவர்கள் என்னிடம் இருந்து சதத்தை எதிர்பார்க்கிறார்கள். அதுவும் ஜோஸ் பட்லரின் தற்போதைய ஆட்டங்களைப் பார்த்த பிறகு” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாண்டு வரும் வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.