சிறுமியுடன் கொஞ்சிப்பேசும் தோனி வைரலாகும் கியூட் வீடியோ..!

Last Updated: திங்கள், 24 டிசம்பர் 2018 (09:02 IST)
"எனக்கு வீடு இல்லை, பேருந்தில் தான் குடியிருக்கிறேன் என ‘தல’ தோனி, ஒரு சிறுமியுடன் கொஞ்சிப் பேசும் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது".


 
சின்னஞ்சிறுமியுடன் கிரிக்கெட் வீரர் ‘தல’ தோனி கொஞ்சி பேசும் க்யூட்டான வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராமில் வெளியான சில மணி நேரங்கள் முதாலகவே சமூக வலைதளங்கள் முழுவதுமாக வைரலாக பரவி வருகிறது.  
 
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சியில் பொழுதினை கழித்து வருகிறார். ஒரு சில விமர்சனங்களை சந்தித்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தோனி, தன் மகள் ஸிவாவுடன் கொஞ்சி பேசும் உரையாடல்கள் அவ்வப்போது வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.
 
இந்நிலையில் இதேமாதிரி, தற்போது தோனி ஒரு குட்டிச்சிறுமியுடன் கொஞ்சிப் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,“எனக்கு வீடு இல்லயே.. நான் பஸ்லயேதான் குடியிருக்கேன்” என விளையாட்டாக தோனி கூறுகிறார்.  பதிலுக்கு அந்தச் சிறுமி,  ‘சரி.. அப்போ வீடு எங்க இருக்கு’என்று கேட்கிறாள். அதற்கு தோனி சிரித்தபடி, ‘என் வீடு ரொம்ப தூரம் இருக்கே’ என்று கூறியுள்ளார்.  ஆஸ்திரேலிய தொடரில் தோனி விளையாடலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த சூழலில் இப்படி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Main bus me hi rehta hoonஇதில் மேலும் படிக்கவும் :