தோனியின் வெறித்தனமான ரசிகன் செய்த காரியத்தை பாருங்க!

Last Modified சனி, 22 டிசம்பர் 2018 (19:08 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.


 
'தல' என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனிக்கு உலகம் முழுவதும்,ரசிகர் பட்டாளம் இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் போட்டிகளின் போது,சென்னை அணி விளையாடும் போட்டிகளில் தோனியை காண்பதற்காகவே பல ரசிகர்கள் பல இடங்களிலிருந்து வருவதுண்டு.
 
இந்நிலையில்  லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தோனி ரசிகர் ஒருவர் தனது காரின் நம்பர் ப்ளேட்டில் "MS Dhoni'' என்று எழுதியுள்ளர். இதனை சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் உறுதி செய்துள்ளது.மேலும் அதனை லாஸ் ஏஞ்சல்ஸில் சொப்பனசுந்தரி'' என்ற வார்த்தையும் பகிர்ந்துள்ளது.


 
தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என பெருமை அவருக்கு உண்டு.இந்த முறையும் தோனி தான் கேப்டனாக இருப்பார் என கூறப்படுகிறது,  நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம் .


இதில் மேலும் படிக்கவும் :