மைக் எட்டல... பக்கெட்ட கவுத்து போடு: வைரலாகும் தமிழிசையின் வீடியோ!

Last Updated: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:50 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தர்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறார். இதற்கு காரணம் மீம் கிரியேட்டர்களுக்கு அவரை வைத்து கிடைத்த கண்டெண்ட்தான். 
 
தமிழிசை பேசும் அனைத்தும் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டெட்ண்ட்தான். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் வெளியான முடிவுகளில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்தது. 
 
இதனை தமிழிசையோ வெற்றிகரமான தோல்வி என்று விமர்சித்திதார். அப்போது வெற்றிகரமான் தோல்வி என்றால் என்னவென பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.  இந்நிலையில், தமிழிசை வெற்றிகரமான தோல்வி என்றால் என்ன? என விளக்கமளிக்க வந்த போது அடுத்த கண்டெண்ட்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். 
 
ஆம், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, மைக்குகள் வைக்க மேடை அமைக்கபப்ட்டிருந்தது. பேட்டியளிக்க தமிழிசை வந்த போது அவருக்கு மேக் வைத்திருந்த மேடையின் உயரம் இவருக்கு சரியாக எட்டவில்லை.
 
இதனால், ஸ்டூல் கொடுங்கள் என அருகில் இருந்தவர்களிடம் கேட்டார். ஆனால் அங்கு ஸ்டூல் இல்லாததால் பக்கெட்டை எடுத்து கவிழ்த்து அதன் மீது ஏறி நிற்க வைத்து தமிழிசையை பேட்டியளிக்க வைத்தனர். 
 
இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அது வைரலாகி வருகிறது. இதனால் தமிழிசைதான் தற்போது வைரல் டாக்காக உள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :