செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (15:04 IST)

தோனிக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் குட்டி ஸிவா! - இணையத்தில் வலம் வரும் வைரல் வீடியோ!

மகள் "ஸிவா" கற்றுக்கொடுக்கும் நடனத்திற்கு  "தோனி" டான்ஸ் ஆடும் கியூட் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து அனைவருக்கும் தெரியும். எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் டென்ஷன் ஆகாத மனிதர் அவர். அதே நேரத்தில் கிரிக்கெட், தொழில், விளம்பரங்கள் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது மனைவி மற்றும் மகளுடன் நேரத்தைச் செலவிடுவதில் அவர் வல்லவர் என்றே சொல்ல வேண்டும்.
 
அவ்வப்போது தன் மகளுடன் தான் கொஞ்சி விளையாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வது தோனியின் வழக்கம். அந்த விடியோக்ளை  பல லட்ச கணக்கானோர்களால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டு வைரலாகிவிடும். 
 
அப்படித்தான் அண்மையில் கூட அவரது மகள் தோனிக்கு தமிழ் கற்றுத் தரும் வீடியோவை வெளியிட்டு தமிழ் நெஞ்சங்களை அள்ளினார். 
 
அந்த வகையில் தற்போது மீண்டும்,  தோனி  தனது மகளுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில் தோனியின் மகள் ஸிவா தோனிக்கு நடனம் கற்றுக்கொடுக்கிறார். மகள் சொல்லிக்கொடுக்கும் நடன அசைவுகளை கவனித்தபடியே தோனி நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. 
 
ஸிவாவின் நடனம் அழகாக இருப்பதாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.