திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 29 ஜூன் 2024 (10:28 IST)

Keep calm and believe in kohli… ஆதரவாக பேசிய கெய்ல்!

உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது. இந்த தொடர் முழுக்க இந்திய அணி தோல்வியே இன்றி விளையாடினாலும் அணியின் நட்சத்திர வீரர் கோலி சொதப்பி வருவது ரசிகர்களுக்கு வேதனையான விஷயமாக அமைந்துள்ளது. அவர் இந்த தொடரில் 7 இன்னிங்ஸ்கள் விளையாடி 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

வழக்கமாக மூன்றாவதாக களமிறங்கும் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அடித்து ஆடவேண்டும் என நினைத்து விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.இந்நிலையில் கோலி ஓய்வு பெறவேண்டும், கோலி தனது வழக்கான இடத்தில் விளையாட வேண்டும் எனப் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அண்யின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் கோலி குறித்து பேசும்போது “கோலி எப்படிப்பட்டவர் என்று தெரியும். அதனால் நாம் பொறுமையாக இருந்து கோலி இறுதி போட்டியில் விளையாடுகிறார் என்பதைப் பார்க்கவேண்டும். ” என ஆதரவாக பேசியுள்ளார். கோலிக்கு மேலும் பல முன்னாள் வீரர்களும் ஆதரவாக பேசி வருகின்றனர்.