1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூன் 2024 (09:04 IST)

இரட்டை சதமடித்த சஃபாலி வெர்மா... இந்திய மகளிர் அணியின் முதல் நாள் ஸ்கோர்..!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய முதல் நாளில் இந்திய மகளிர் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 525 ரன்கள் குவித்துள்ளது.
 
தொடக்க ஆட்டக்காரரான சஃபாலி வெர்மா மிக அபாரமாக விளையாடி 205 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். அதேபோல் இன்னொரு தொடக்க ஆட்ட வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 149 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கௌர் மற்றும் ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர் என்பதும் இருவரும் 42 மற்றும் 43 ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தென்னாபிரிக்கவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மிக அபாரமாக இந்திய வீராங்கனைகள் விளையாடி வருவதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
Edited by Mahendran