1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. IPL 2026 Reaches Climax As RCB, GT, And SRH Qualify For Playoffs While CSK Suffers Big Loss

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

ஐபிஎல் 2026
டாடா ஐபிஎல் 2026 டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரின் லீக் சுற்றுகள் முடிவுக்கு வரும் நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கான தகுதிப் போட்டிகள் சூடுபிடித்துள்ளன. 
 
இதுவரை விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , மும்பை இந்தியன்ஸ்  உள்ளிட்ட 3 அணிகள் அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகள் தங்களின் சிறப்பான ஆட்டத்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
 
முன்னதாக நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டி ஒன்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி பேட்டிங்கில் சொதப்பி, 140 ரன்களுக்குள் சுருண்டு படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியால் பிளே ஆஃப் வாய்ப்பை சிஎஸ்கேவும் இழந்தது.
 
தற்போது ப்ளே ஆஃப் சுற்றின் எஞ்சிய கடைசி இடத்தைப் பிடிப்பதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே புள்ளிகள் பட்டியலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் வரவிருக்கும் கடைசி லீக் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!