வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடர் முழுக்க இந்திய அணி தோல்வியே இன்றி விளையாடினாலும் அணியின் நட்சத்திர வீரர் கோலி சொதப்பி வருவது ரசிகர்களுக்கு வேதனையான விஷயமாக அமைந்துள்ளது.

அவர் இந்த தொடரில் 7 இன்னிங்ஸ்கள் விளையாடி 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். வழக்கமாக மூன்றாவதாக களமிறங்கும் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அடித்து ஆடவேண்டும் என நினைத்து விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.

இந்நிலையில் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி வீரர அஸ்வின் பேசியுள்ளார். அதில் “கோலி அரைசதம் அடிக்கவில்லை, சதம் அடிக்கவில்லை என்று ரசிகர்கள் கூட வருந்துகின்றனர். ஆனால் அவர் அணிக்காக ஒரு அற்புதமான விஷயத்தை செய்து வருகிறார். அவரது ஆட்டத்தில் சுயநலமில்லாமல் விளையாடுகிறார். அவர் ஏற்கனவே நிறுவி வைத்துள்ள பென்ச்மார்க்குக்கு அவரை இழுக்க பார்க்கிறார்கள். ஆனால் அவர் ஆட்டத்தில் மாற்றம் செய்யப் போவதில்லை. அவர் இதே போல அட்டாக் செய்துதான் விளையாடப் போகிறார்” எனக் கூறியுள்ளார்.