வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (11:01 IST)

SENA நாடுகளில் டி 20 தொடரை வென்ற முதல் கேப்டன் – கோலி சாதனை!

நேற்றைய போட்டியில் வென்று தொடரை வென்ற கேப்டன் கோலி சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நேற்று நடந்த டி 20 போட்டியை வென்று தொடரை வென்றார் கேப்டன் கோலி. இதன் மூலம் SENA என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் டி 20 தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் முதல் ஆஸ்திரேலியக் கேப்டனும் கோலிதான்.

ஒருநாள் தொடரை இழந்த கோலியின் கேப்டன்சியில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த வெற்றிகளின் மூலம் பதில் சொல்லியுள்ளார். கோலியின் தலைமையில்  இந்திய அணி 190-க்கும் மேற்பட்ட இலக்கைத் இதுவரை ஏழு முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.