ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (10:35 IST)

கொரோனா பாதுகாப்பு கவசத்தோடு திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் – வைரலாகும் புகைப்படம்!

கொரோனா பாதிக்கப்பட்ட பெண் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் கொரோனா பாதுகாப்பு கவச உடையோடு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ராஜஸ்தான், ஷாபாத் பாராவில் உள்ள கெல்வாரா கரோனா மையத்தில் நேற்று கொரோனா கொரோனா பாதிப்பு உறுதியான பெண்ணுக்கு திருமணம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்குக் கொரோனா உறுதியானதால் அவர் இவ்வாறு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மணமகன் மற்றும் திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதர் கொரோனா பிபிஇ கிட் உடையுடன் இருக்க பெண்ணும் கவச உடை அணிந்துள்ளார். இந்த திருமணம் அரசின் வழிகாட்டுதல்களுடனே நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சமூகவலைதளங்களிலே பாதுகாப்பை மீறி இவ்வாறு அவசரப்பட்டு மணமக்கள் திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.