வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (10:35 IST)

ட்ரம்ப்பே தோல்வி அடைந்துவிட்டார்… ஆனால் மோடி வென்றார் – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார்.

உலககத்தையே கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் முடக்கி போட்டுள்ளது. இதில் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்க உள்ளது. அங்கு பல லட்சம் பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப்பின் செயலற்ற ஆட்சியே என சொல்லப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் அவர் தோற்றதற்கு கொரோனா வைரஸ் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா ‘கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் நம் பிரதமர் மோடி அதில் வெற்றி பெற்றுவிட்டார். அமெரிக்காவில் நிலையற்ற பொருளாதார தன்மை உள்ளது. இந்தியா அதில் இருந்து மீண்டு வருகிறது ‘ எனக் கூறியுள்ளார்.