திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (10:28 IST)

மத்தவங்க இதை செய்யவே பல வருஷம் ஆகியிருக்கும்! – குத்தி காட்டும் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு செலுத்த உள்ள நிலையில் ஜோ பிடன் அரசை மறைமுகமாக விமர்சித்து ட்ரம்ப் பேசியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்ததற்கு கொரோனா குறித்த அவரது பேச்சுகளும் மறைமுக காரணமாக பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்தில் அவற்றை மக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் “கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை நாங்கள் 7 மாதத்தில் கண்டுபிடித்துள்ளோம். வேறு யாராவது இருந்திருந்தால் மருந்தை கண்டுபிடிக்க 5 ஆண்டுகள் ஆகியிருக்கும்” என மறைமுகமாக ஜோ பிடனை தாக்கி பேசியுள்ளார்.