1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (10:35 IST)

நாட்டுக்காக முதல் தொடர் வெற்றி – நடராஜன் டிவிட்டரில் நெகிழ்ச்சி!

இந்திய அணியில் தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இந்திய அணி டி 20 தொடரை வென்றது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 தொடரையும் வென்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். முதல் போட்டியில் 3 விக்கெட்களை எடுத்த நடராஜன், இரண்டாவது போட்டியில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆஸி அணி 194 ரன்கள் குவித்த இன்னிங்ஸில் நடராஜன் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடர் வெற்றி குறித்து டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார் நடராஜன். அதில் ‘என் நாட்டுக்காக நான் கலந்துகொண்ட முதல் தொடரே வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.’ எனத் தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடி வரும் நடராஜன் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்வார் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.