வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified வியாழன், 2 மார்ச் 2023 (22:43 IST)

சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி சென்னை வருகை!

Dhoni
இம்மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரையொட்டி, இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா  நடை ரைடர்ஸ்,  மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

ஐபிஎல் போட்டித் தொடரில், தோனி தலைமையிலான சென்னை அணி மிக வலுவாக உள்ளதாலும், மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டிகள் நடக்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்த   நிலையில், தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரையொட்டி, இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.

மார்ச் 31 ஆம் தேதி லீக் போட்டிகள் தொடங்கும் நிலையில், வரும் மே மாதம் 28 ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கும் என சமீபத்தில் வெளியான அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.
அகமதாபாத்தில்  நடக்கும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் அணி மோதுகிறது.

எனவே இதற்கான பயிற்சியில் ஈடுபட வேண்டி, தோனி இன்று சென்னை வந்துள்ளார்.
அவரை சென்னை விமான நிலையத்தில், சூப்பர்  கிங்ஸ்  நிர்வாகிகள் மலர்தூவி வரவேற்றனர்.