திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 18 பிப்ரவரி 2023 (15:33 IST)

பாலிவுட் நடிகர் ஷாநவாஸ் காலமானார்...ரசிகர்கள் அதிர்ச்சி

Shanavas
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ஷாநவாஸ் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நிலையில், மாரடைப்பால் காலமானார்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ஷாநவாஸ். இவர் சாயீப் அலிகானுடன் இணைந்து பாந்தோம், எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி, வல் சுதா, ரேயீஸ்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குடா ஹபீஸ்(2020). இவர் சினிமாவில் மட்டுமின்றி, தொலைக்காட்சி, மற்றும் ஓடிடி தளங்களில் வெப் தொடர்களிலும்  நடித்து வந்தார்.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாநவாஸ் திடீரென்று மாரடைப்பால் சரிந்து விழுந்தார்.

உடனே அவரை மீட்டு கோகிலாபென் திருபாய் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.