வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (23:22 IST)

சாதனையாளர்களின் விடாமுயற்சிகள்- சினோஜ் கட்டுரைகள்

இன்றிலிருந்து நாளைக்குச் செல்வதற்குக் காலம் கூட நேரம் என்ற வாகனத்தில் விடாமுயற்சியென்ற எரிபொருளை நிரப்பிக்கொண்டு செல்கிறது.

அடுத்த ஏழு நாளுக்கு அது வாரமெனும் பேருந்தில் ஏறிக் கடக்கிறது. அடுத்த 30  நாட்களுக்கு மாதமெனும் கப்பலிலில் பயணிக்கிறது. அடுத்த 365 நாட்களுக்கு நீண்ட தொடர்வண்டியெனும் வாகனத்தில் சென்று தன் ஓராண்டுப் பயணத்தை  நிம்மதியாய் முடித்துக்கொண்டு, மீண்டும் அதேபோல் மறு சுழற்சிக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது காலம்.

அப்படியென்றால் காலத்திடமிருந்து கற்றுகொள்ள எத்தனை விஸயங்கள். மாறிக் கொண்டே செல்லும் இன்ற காலம் பயன்பாட்டில் உள்ள உலகில் நாளும்  நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஸயங்கள் இருக்கிறது?
.

ஒன்றோடொன்று சங்கிலித்தொடர் போலிருக்கும் இந்த உலகில் எதுவும்  ஏமாற்றத்திற்குரியதல்ல. எல்லாம் பெருமுயற்சி மற்றும் விடாமுயற்சியின் பயனால் விளைந்தவையே ஆகும்.

எதோ ஒன்றைச் செய்துவிட்டு, ஒரு சில மணி நேரங்களிலேயே அது கை கொடுக்கவில்லையென்று சோர்வடைந்து, ஏமாற்றமென்ற முட்களைக் கிரீடமாக்கி ஏன் தலையின் மீது நாம் சுமக்க வேண்டும்!

முன்பெல்லாம், ஒரு வங்கியில் பணம் செலுத்தவும், பணம் எடுக்க வேண்டுமானால், வரிசையில் நின்று, ஒரு அரைநாள் செலவாகும், இதற்காக வேலைக்கு லீவு எடுக்க வேண்டியதிருக்கும்.

இந்த நிலையை மாற்றியது ஏடிஎம்…..இந்த ஏடிஎம் மெஷினை கண்டுபித்த ஜான் ஷெப்பர்ட் பேரோனும் தொடர் முயற்சியின் விளைவாகத்தான் இதைக் கண்டுபிடித்திருப்பார். அவர் அன்று கண்டுபிடித்தது. உலக மக்களுக்கு எல்லாம் பெரும் பயனுடையான் இன்றிருக்கிறது.

ஏடிஎமிற்குப் பிறகு, டிஜிட்டல் வழி பணப்பரிவர்த்தனைகளால், எங்கிருந்தாலும் நொடியில் பணத்தைச் செல்போன் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்!

இதெல்லாம் ஒரே நாளில் வந்துவிட்டதா… ஒவ்வொரு காலக்கட்டத்தில் இருந்தவர்களின் அதியற்புதமான கற்பனை, அந்தக் கற்பனைக்கு உயிர்கொடுத்து, அதைச் செயல்படுத்துவதற்கான திட்டமிட்ட உழைப்பு இதெல்லாம் சாத்தியமானதால் தானே. அவர்களின் கனவுப் பொருட்கள் இன்று நமக்கான தேவைகளில் முக்கியம் இடம் வகித்து, பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத்தான், அனைத்து வெற்றிகளுக்குமான ரகசியம் என்னவென்றால், விடாமுயற்சி என்று விக்டர் ஹியூகோ கூறினார்.

இந்த உலகில் அதிகமான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அதற்குக் காப்புரிமை பெற்றவருமான தாமஸ் ஆல்வா எடிசன்,  நான்  விரும்பியதை அடையும் வரை, நான் இலக்கிலிருந்து ஒருபோதும் வெளியேறப்போவதில்லை என்று கூறினார்.
Atm

மனிதனுக்கு உழைப்பது எப்படி முக்கியமோ அதேபோல், விலங்குகளுக்கு வேட்டையாடுவது, பறவைகளுக்கு இரைதேடுவது என்பது முக்கியம்.

பைபிளில்,நீதிமொழிகள் 6 ஆம் அதிகாரம்,  6 ,7,8 ஆகிய வசனங்களில், நீ எறும்பினிடத்தில்போய் அதன் வழிகளைப் பார்த்து, அதனிடமிருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்!

அந்த எறும்பிற்குப் பிரபுவும், அதிகாரியும்ம்  தலைவனும் இல்லாமல் இருந்தும்கூட, அவை கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்தும், அறுப்புக் காலத்தில் தானியத்தைச் சேர்த்து வைக்கிறது என்கிறார்.

எறும்புகள் செல்லும்போது, ஒரு தடுப்பு போட்டால், அது அடுத்து சுற்றிச் சுற்றி வந்து, மீண்டும், வேறு வழியில் தீனி இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்துச் செல்லும்.
எறும்பின் சுறுசுறுப்பு நமக்கும் உண்டு, ஆனால், அதை வெளிப்படுத்துவதில் நமக்கு சிரமம் உண்டாகிறது.

இதற்கு சோர்வும் கூட ஒரு காரணமாயிருக்கலாம்! இந்தச் சோர்வைப் புறம் தள்ளிவிட்டு, தொடர்ந்து முயற்சியில் இறங்கும்போது, அது வெற்றிக்கான வாசலைத் திறந்துவிடும்.

நீங்கள் ஏற்கனவே கடினமாக உழைத்துச் சோர்வடைந்த பிறகும் நீங்கள் செய்கின்ற கடின உழைப்புதான் விடாமுயற்சி என்று நியூட் கிங்ரிச் கூறினார்.

அதேபோல், ஒரு செயலில் நாம் எத்தனை முறை கீழே விழுந்தோம் என்பது  நம்மைத் தீர்மானிப்பதில்லை, விழும்போதெல்லாம் தூசியைத் தள்ளிவிட்டு, துடைத்தெறிந்துவிட்டு, முன்னேறிச் செல்லுவதில்தான் தீர்மானிக்கப்படுகிறது… அதில் தான் நம் வெற்றியும் அடங்கியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அந்த வீரர் கடந்த 2008 ஆண்டு இந்திய இளையோர் அணி கிரிக்கெட்டிற்கு தலைமையேற்று உலகக் கோப்பை வென்றார்.

சில மாதங்களில், இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து இலங்கைக்கு எதிராக முதன் முதலில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார்.
Dhoni Kohli

இதையடுத்து, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், இந்திய அணியிலும் இடம்பெற்றார். அந்த ஆண்டுதான் இந்திய அணி உலகக்கோப்பை வென்றது.

பின்னர், 2013 ஆம் ஆண்டு ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த அவர்,  தன் சிறந்த பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி, சதங்கள், மற்றும் அதிக ரன்கள் எடுத்தவராகவும் விளங்கினார்.

எனவே, தோனி 2014 ஆம் ஆண்டு ஒரு  நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, இந்திய அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்று, 2020 வரை அப்பொறுப்பில் இருந்தார்.

சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்த அவர், போன்று வர வேண்டும் என்பது இளம் வீரர்களுக்கு ஆசையுள்ளது.

அவர்தான் விராட் கோலி! அவர் இடையில் சில சறுக்கல்களைச் சந்தித்தித்தாலும் தற்போது மீண்டு வந்திருக்கிறார்.

இதேபோல், நமது தொடர் முயற்சியும் அடுத்தடுத்த உயரங்களுக்கு  நம்மை அழைத்துச் செல்லும்.

சீனா பேரறிஞர் கான்பூசியஸ், முயற்சிப்பதை நிறுத்தாதவரை நீங்கள் எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை என்று கூறியதுபோல், நானும் விடாமுயற்சியின் பாதையில் பயணிப்போம் வாழ்வில் வெற்றிக் கனியை ருசிப்போம்!

தொடரும்

மீண்டும் சந்திப்போம்

#சினோஜ்