திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (17:29 IST)

தோனியை புகழ்ந்து பேசிய விராட் கோலி!

தோனி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி , சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா  நடை ரைடர்ஸ்,  மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

இந்த நிலையில், ஆர்.பி.சி அணியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விராட்கோலி, முன்னாள் கேப்டன் தோனியுடனான தன் நெருக்கம் பற்றிக் கூறினார்.

அதில், கடினமாக நேரத்தில், என்னுடன் அனுஷ்கா, என் சிறுவயது பயிற்சியாளர், குடும்பத்தினரைத் தவிர என்னை உண்மையாக அணுகிய ஒரே நபர் தோனி தான்.

தோனிக்கு போன் செய்தால் அவர் 90% எடுக்க மாட்டார். அவர் அதைப் பார்ப்பதே இல்லை; ஆனால், ஒருமுறை எனக்கு அவர் போனில் மெசேஜ் அனுப்பினார்.

அதில்,  நீங்கள் வலிமையானவாரகவும் இருக்கும்போது, மற்றவரால் வலிமையானவராக அறியப்படும்போது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க மறந்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அந்த மெசேஜ் என்னில் தாக்கம் ஏற்படுத்தியது. தோனி எனக்குச் சொன்னதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.