தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பை டி20: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?
- பும்ராவுக்கு பதில் தென் ஆப்பிரிக்கா தொடரில் அறிவிக்கப்பட்ட மாற்றுவீரர்!
- 6 மாத காலம் கிரிக்கெட்டுக்கு குட்பை… பூம்ரா பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!
- டி-20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய பும்ரா! ரசிகர்கள் அதிர்ச்சி
- டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: பும்ரா திடீர் விலகல் !
“பூம்ரா இன்னும் உலகக்கோப்பை அணியில் இருக்கிறார்…” கங்குலி சொல்வது என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி இதுகுறித்து பேசியபோது “பும்ரா உலககோப்பை தொடரில் இருந்து இன்னும் வெளியேறவில்லை. அவர் அணியுடன் ஆஸ்திரேலியா செல்வாரா மாட்டாரா என்பது இன்னும் 3 நாட்களில் தெரியவரும்” எனக் கூறியுள்ளார். இது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.