செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (17:52 IST)

டி-20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய பும்ரா! ரசிகர்கள் அதிர்ச்சி

டி-20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஐசிசி அமைப்பு நடத்தும் டி-20  உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோர்பர் 16 ஆம் தேதி  முதல்   நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.   இதற்கான அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது,   இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது, இதில், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் உள்ளன,

இத்தொடரில் ரோஹித் தலைமையிலான இந்திய அணியில், கோலி,   வ்சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்தி, புவனேஷ்குமார், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்,

இந்த நிலையில், இந்திய அணியின் திறமையான பந்து வீச்சாளரான பும்ரா, முதுகு வலி, காயம் காரணமாகக டி-20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது இடத்தை அக்சர் படேல் சமாளிப்பார் என தெரிகிறது.
 
Edited by Sinoj