1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (12:51 IST)

பும்ராவுக்கு பதில் தென் ஆப்பிரிக்கா தொடரில் அறிவிக்கப்பட்ட மாற்றுவீரர்!

தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரில் மீதமுள்ள 2 போட்டிகளுக்கான மாற்று வீரராக முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.