டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: பும்ரா திடீர் விலகல் !
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து பும்ரா விலகி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது
இதனை அடுத்து அவர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ரா விலகியதால் அவருக்கு பதில் யாரை சேர்ப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கை
Edited by Mahendran