1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India Suffers Crushing 9-Wicket Defeat Against England in 4th T20I

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
ஏற்கனவே மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா படுதோல்வி அடைந்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியிலும் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. வைபவ் சூர்யவன்ஷி வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று 80 ரன்கள் குவிக்க, இந்திய அணி 158 ரன்களை மட்டுமே எட்டியது. 
 
மிக எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் சால்ட் 59 ரன்களும், கேப்டன் ஹாரி புரூக் 79 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். வெறும் 13.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய இங்கிலாந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. 
 
இந்தத் தொடர் தோல்விகள் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் உள்ள பலவீனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...