வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (07:10 IST)

11 மாத இடைவெளிக்குப் பின் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா!

காயம் காரணமாக கிட்டத்தட்ட 11 மாதங்களாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரீத் பூம்ரா தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். அவர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது பேசிய அவர் “மிகவும் நன்றாக உணர்ந்தேன், NCA இல் பல முறை பயிற்சிகளில் ஈடுபட்டேன். அதனால் நான் நிறைய தவறவிட்டதாகவோ அல்லது புதிதாக ஏதாவது செய்வதாகவோ உணரவில்லை. அங்குள்ள ஊழியர்களுக்கு நன்றி, அவர்கள் என்னை நல்ல மனநிலையில் வைத்திருந்தனர். உண்மையில் பதற்றம் இல்லை ஆனால் மிகவும் மகிழ்ச்சி. ப்ரண்ட் சைடில் ஸ்விங் இருந்ததால் அதைப் பயன்படுத்த விரும்பினோம். அதிர்ஷ்டவசமாக நாங்கள் டாஸ் வென்றோம். வானிலையும் எங்களுக்கு ஒத்துழைத்தது. அணியில் அனைத்து வீரர்களும் தன்னம்பிக்கையோடு விளையாடுகிறார்கள். அதற்கு ஐபிஎல் மிகப்பெரிய அளவில் உதவுகிறது” எனக் கூறியுள்ளார்.