வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2023 (07:03 IST)

மழையால் பாதிக்கப்பட்ட முதல் டி 20 போட்டி… டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்தியா வெற்றி

பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 போட்டி நேற்று டப்ளின் நகரில் தொடங்கியது.

இந்த போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் பின்னர் இந்திய அணி 6.5 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்து ஆடிக்கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் ஜாஸ்ப்ரீத் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.