திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:55 IST)

பூம்ரா தலைமையில் இந்திய அணி… இன்று அயர்லாந்துடன் முதல் டி 20 போட்டி!

நீண்டகாலமாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரீத் பூம்ரா தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். அவர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் இன்று டப்ளின் மைதானத்தில் நடக்கும் முதல் டி 20 போட்டியில் இரு அணிகளும் மாலை 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. ஐபிஎல் தொடரில் கலக்கிய ரிங்கு சிங் இந்த தொடரில் அறிமுகமாகவுள்ளார்.

இந்தியா உத்தேச அணி:-

ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (WK), திலக் வர்மா, ரின்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (கேட்ச்), ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்