1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (08:47 IST)

இந்தியா பாகிஸ்தான் போட்டியால் 15 மடங்கு விலையுயர்ந்த ஹோட்டல் ரூம் வாடகை!

இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடக்க உள்ள இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த போட்டிதான் இந்த உலகக் கோப்பை தொடரின் ஹை வோல்டேஜ் போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியைக் காண உலகின் பல இடங்களில் இருந்தும் ரசிகர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியால் அகமதாபாத் நகரில் போட்டி நடக்கும் நாளன்று ஹோட்டல்களில் அறை வாடகை உச்சத்தைத் தொட்டுள்ளது.

வழக்கமாக அதிகபட்சம் 4000 ரூபாய் வரை இருக்கும் ஹோட்டல் ரூம் வாடகை 60000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 15 மடங்கு வரை வாடகையை ஹோட்டல் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.