வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (20:47 IST)

டி-20: இந்திய அணி பந்துவீச்சில் அயர்லாந்து அணி திணறல்...

India vs Ireland
இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரீத் பூம்ரா தற்போது அணிக்கு திரும்பியுள்ள  நிலையில், அவர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இன்று டப்ளின் மைதானத்தில்   நடக்கும் - இரு அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 7.30 மணிக்குத் தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே, அயர்லாந்து அணி தற்போது  பேட்டிங் செய்து வருகிறது. இதில், ஆண்ட்ரூ 4 ரன்னும், ஸ்டிரிங் 11 ரன்னும் , டக்டர் 9 ரன்னும் அடித்தனர். சாம்பர் 24 ரன்னும், பேரி 11 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 15.4 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள்  எடுத்து அயர்லாந்துவிளையாடி வருகிறது

இந்திய அணி சார்பில்  பும்ரா, கிருஷ்ணா, பிஷோனி தலா  2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.