1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (17:02 IST)

கோலி, சூர்யகுமார் யாதவ்வுக்கு எங்களிடம் திட்டம் உள்ளது… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிராக நடக்க உள்ள போட்டி குறித்து பேசியுள்ளார்.

இந்தியா நாளை நடக்க உள்ள இரண்டாவது டி 20 போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

அதில் “எந்தவொரு அணியும் இந்தியாவை குறைவாக மதிப்பிடமாட்டார்கள். கோலி மற்றும் சூர்யகுமார் ஆகிய இருவரும் சிறப்பான பார்மில் உள்ளார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு எதிராக அதிக ரன்களைக் குவிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கான திட்டம் எங்களிடம் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.