திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (09:33 IST)

இந்தியா நியுசிலாந்தை இறுதிப் போட்டியில் சந்திக்கும்… கோப்பை யாருக்கு?- டிவில்லியர்ஸ் கணிப்பு!

மிஸ்டர் 360 என புகழப்படும் டிவில்லியர்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஏபி டிவில்லியர்ஸ். தன்னுடைய வித்தியாசமான ஷாட்களால் மைதானத்தின் 360 டிகிரியிலும் ஸ்கோர் செய்யும் வல்லமை உள்ள அவரை மிஸ்டர் கிரிக்கெட் என்றும் மிஸ்டர் 360 டிகிரி எனவும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் டி 20 உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார். மேலும் “அவர் இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய அணி இறுதிப் போட்டியில் நியுசிலாந்தை எதிர்கொள்ளும். அதில் இந்தியா வெல்லும்” எனக் கூறியுள்ளார்.