வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (09:32 IST)

கோலி ஒரு நாள் லீவ் எடுத்துக்கொள்ள வேண்டும்… இங்கிலாந்து முன்னாள் வீரரின் பயங்கர ஆசை!

இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற நல்ல வாய்ப்புகள் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி வந்தார். ஆனால் ஆசியக்கோப்பை தொடருக்குப் பின்னர் அவரின் பழைய ஆட்டம் மீண்டும் தொடங்கியது. தற்போது டி 20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடம் பிடித்து மீண்டும் தன்னை ஒரு ரன் மெஷின் என நிருபித்துள்ளார்.

நாளை நடக்க உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில் கோலியின் பார்ம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் “கோலி பார்முக்கு வந்திருப்பது ஒரு நண்பராக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விளையாடும் போது அவரை உற்சாகப்படுத்த ரசிகர்கள் தேவை. அரையிறுதியில் விராட் கோலி, ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.