தொடர்புடைய செய்திகள்
- 3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவார் - குல்தீப் யாதவ் நம்பிக்கை
- நாளைய போட்டியில் அறிமுகம் ஆகிறாரா துருவ் ஜூரல்? எதிர்பார்ப்பை எகிறவைத்த புகைப்படம்!
- ஐபிஎல் தொடரிலாவது விளையாடுவாரா கோலி? திடீர்னு கிளம்பிய வதந்தி!
- மாமல்லபுரம் கடலில் இறங்கிய இங்கிலாந்து பெண்! அலை இழுத்து சென்றதால் பரிதாப பலி!
- மீண்டும் கழண்டுகொண்ட கே எல் ராகுல்… மூன்றாவது டெஸ்ட்டில் இணைந்த இளம் வீரர்!
கே ராகுல் செய்த செயலால் அதிருப்தியடைந்த பிசிசிஐ… ஓ இதுதான் காரணமா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட்டில் காயம் காரணமாக விலகிய கே எல் ராகுல் மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இணைந்தார். ஆனால் இப்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் கிரிக்கெட் வீரரான தேவ்தத் படிக்கல் அணியில் இணைந்துள்ளார். மூன்றாவது போட்டிக்கு அவர் முழுமையான உடல் தகுதி பெறாததே இந்த விலகலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தான் முழு உடல் தகுதி பெற்றது போல பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ராகுல் பகிர்ந்திருந்தார். ஆனால் அவர் முழு உடல் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. இதனால் ரசிகர்களுக்கு தவறான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட கே எல் ராகுல் மேல் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.