வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (08:43 IST)

மாமல்லபுரம் கடலில் இறங்கிய இங்கிலாந்து பெண்! அலை இழுத்து சென்றதால் பரிதாப பலி!

brahmaputra drown
மாமல்லபுரத்தில் கடலில் குளிக்க சென்ற இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணியை அலை இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பல வெளிநாட்டினரை கவரும் தமிழக சுற்றுலா தளங்களில் மாமல்லபுரமும் ஒன்று. இங்குள்ள புராதான சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள கடற்கரையில் குளிப்பதும் உண்டு. மாமல்லபுரத்தை சுற்றி பார்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரிகெட் டைலர் என்ற 84 வயதான மூதாட்டி தனது மகன் ரூபர்ட் டைலருடன் (54) வந்துள்ளார்.

புராதான சின்னங்களை சுற்றி பார்த்த பிறகு மாமல்லபுரம் கடற்கரையில் அவர் குளித்துள்ளார். அப்போது ராட்சத அலையில் பிரிகெட் டைலர் சிக்கிக் கொண்டுள்ளார். இதனால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் கழித்து அவரது தாய் பிணமாக கரை ஒதுங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் சென்று பெண்மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாமல்லபுரத்தில் இங்கிலாந்து பெண்மணி இறந்தது குறித்து இங்கிலாந்து தூதரகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பெண்மணியின் உடலை இங்கிலாந்திற்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K