வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (10:18 IST)

3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவார் - குல்தீப் யாதவ் நம்பிக்கை

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையே  ஏற்கனவே  நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் விலகினர்.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவார் என  குல்தீப் யாதவ்   நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளதாவது:

ஜடேஜா தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான  3 வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என  நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சிதான். நான் அணியயில் விளையாடுகிறேனோ இல்லையோ…ஆனால் தொடர்ந்து கடுமையான உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.