1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin thanked Washington sundar in goat movie style

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

அஸ்வின்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அஸ்வின் வருத்தம் எதையும் பகிராமல் தனக்கு வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகளைப் பகிர்ந்துள்ளார். ஆதங்கத்தை வெளிப்படுத்திய தந்தையின் பேச்சைக் கூட ஜாலியாகக் கலாய்த்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பவுலர் வாஷிங்டன் சுந்தருக்கு “துப்பாக்கியைப் பிடிங்க வாஷி” என கோட் பட ஸ்டைலில் சொல்லி, “கெட் டுகெதர் நிகழ்ச்சியில் உங்கள் பேச்சுதான் சிறந்தது” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!