1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin emotioanal after sachin and kapil dev calls after retirement

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அஸ்வின்
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே தோனி போலவே அஸ்வினும் ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதே கருத்தை அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரனும் வெளிப்படுத்தியிருந்தார். அவர் “இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்துதான் இருந்தோம். ஏனென்றால் அணிக்குள் அவர் கடந்த சில மாதங்களாக சில அவமானங்களை சந்தித்தார்” எனக் கூறியிருந்தார். ஆனால் அதை அஸ்வின் மறுத்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய ஸ்மார்ட் போனின் call log-ஐப் பகிர்ந்து “25 வருடத்துக்கு முன்பு என்னிடம் யாராவது வந்து உன்னிடம் ஸ்மார்ட் போன் இருக்கும். நீ ஓய்வு பெறும் நாளில் உன்னுடைய call log இப்படி இருக்கும் என சொல்லியிருந்தால் என் நெஞ்சே வெடித்திருக்கும்-நன்றி கபில்தேவ் &சச்சின்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!