தொடர்புடைய செய்திகள்
- 'டே பாதர் என்னடா இதெல்லாம்'… தந்தையை ஜாலியாகக் கலாய்த்த அஸ்வின்!
- ‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!
- சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!
- தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!
- தோனி செய்த தவறையே அஸ்வினும் செய்துள்ளார்… கவாஸ்கர் கருத்து!
சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே தோனி போலவே அஸ்வினும் ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதே கருத்தை அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரனும் வெளிப்படுத்தியிருந்தார். அவர் “இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்துதான் இருந்தோம். ஏனென்றால் அணிக்குள் அவர் கடந்த சில மாதங்களாக சில அவமானங்களை சந்தித்தார்” எனக் கூறியிருந்தார். ஆனால் அதை அஸ்வின் மறுத்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இதுகுறித்து பேசும்போது “இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின். அவர் ஓய்வை அறிவிக்கும்போது நான் இருந்திருந்தால் அவரை இப்படி அனுப்பியிருக்க மாட்டேன். அவருக்கு உரிய மரியாதை கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பி இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்