தொடர்புடைய செய்திகள்
- 25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!
- சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!
- 'டே பாதர் என்னடா இதெல்லாம்'… தந்தையை ஜாலியாகக் கலாய்த்த அஸ்வின்!
- ‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!
- சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!
கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவர் ஓய்வு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர்கள் பலரும் அவர் ஒழுங்காக வழியனுப்பப் படவில்லை என்ற குற்றச்சாட்டையே வைத்துள்ளனர். கபில் தேவ் பேசும் போது “சச்சின் மற்றும் கவாஸ்கருக்கு நிகரான டெஸ்ட் வீரர் அஸ்வின்” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி “தற்போது கோலி கேப்டனாக இருந்திருந்தால் அஸ்வினின் ஓய்வு முடிவை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். தொடர் முடிந்ததும் அவரை ஓய்வு அறிவிக்க சொல்லியிருப்பார். ஏனென்றால் சிட்னி மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பது அவருக்குத் தெரியும். டிராவிட் அல்லது ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்திருந்தாலும் அவரை பாதியிலேயே வில அனுமதித்திருக்க மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்