1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:55 IST)

“காதலியுடன் வெளியே செல்லவேண்டும்…” கிரிக்கெட் வீரரிடம் 500 ரூபாய் கேட்டு வாங்கிய ரசிகர்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ராவின் சமூகவலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் உரையாடல் வைரலாகியுள்ளது.

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் அமித் மிஸ்ரா. ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர். சமீபத்தில் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவருடன் அவர் மேற்கொண்ட உரையாடல் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர் ஒருவர் தன்னுடைய காதலியோடு வெளியே செல்ல 300 ரூபாய் பணம் அனுப்புங்கள் என வேடிக்கையாக கேட்க, அவருக்கு கூகுள் பே மூலமாக 500 ரூபாய் அனுப்பி அந்த ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார் அமித் மிஸ்ரா. இந்த உரையாடல் சமுகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.