திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:11 IST)

தனுஷின் ‘நானே வருவேன்’ இன்று ரிலீஸ்: திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்!

naane
தனுஷின் ‘நானே வருவேன்’ இன்று ரிலீஸ்: திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்!
தனுஷின் நானே வருவேன் திரைப்படம் இன்று ரிலீசாக இருப்பதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்த நானே வருவேன் என்ற திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையில் கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது 
 
இந்த படத்தின் முதல் காட்சியை காலை 8 மணிக்கு தொடங்கியதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த படத்தை தற்போது பார்த்து வருகின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் இந்த படத்தின் முதல் விமர்சனம் வந்துவிடும் என்பதால் இந்தப் படத்தின் ரிசல்ட் என்ன என்பதும் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால்து திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து நானே வருவேன் படமும் தனுசுக்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.