நாளை ‘சர்தார்’ படத்தின் டீசர் ரிலீசா? கார்த்தி ரசிகர்கள் உற்சாகம்!
கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் கார்த்தி நடித்த மற்றொரு படமான சர்தார் படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நாளை வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தின் இடைவேளையின் போது ர் சர்தார் படத்தின் டீசர் திரையரங்குகளில் திரையிடப்படும் என கூறப்படுகிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது