1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2022 (18:15 IST)

பல வருடங்களுக்கு பின் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அஜித்? ரசிகர்கள் உற்சாகம்!

ajith interview
பல வருடங்களுக்கு பின் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அஜித்: ரசிகர்கள் உற்சாகம்!
பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் அஜித் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நடிகர் அஜித் கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வில்லை என்பதும் அவருடைய படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கூட அவர் வருவதில்லை என்பது தெரிந்ததே 
 
பல ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயற்சித்த கூட அவர் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்க வில்லை. இந்த நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் ஆனந்தவிகடனுக்கு பேட்டி அளித்துள்ளார்
 
இது குறித்த விளம்பரம் ஆனந்தவிகடனில் ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அஜித் பேட்டி அளித்த ஆனந்த விகடன் இதழ் நாளை வெளிவர இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.