வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2023 (08:52 IST)

உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள்… டிவில்லியர்ஸின் கணிப்பு!

இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் ஆருடம் சொல்லி வருகின்றனர். இதில் பெரும்பாலான வீரர்களின் தேர்வு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளாகதான் உள்ளன.

இந்நிலையில் இப்போது தென்னாப்பிரிக்கா முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் பற்றி தன்னுடைய கருத்தைக் கூறியுள்ளார். அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளைக் குறிப்பிட்டு, நான்காவது அணியாக பாகிஸ்தான் அல்லது தென்னாப்பிரிக்காவைக் கூறியுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு கூடுதல் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.