1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. World cup chess indian player qualified for semi final

உலகக் கோப்பை செஸ் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா

உலகக்கோப்பை
உலக கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு  இந்தியாவைச் சேர்ந்த  பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  
 
உலக கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
உலக கோப்பை செஸ் தொடரின் காலு இறுதி போட்டியில் தன்னை எதிர்த்து விளையாடிய அர்ஜுன் எரிகேசி  என்பவரை தோற்கடித்து பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.  ’
 
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி ஏழு டைபிரேக் ஆட்டங்களுக்கு பிறகு பிரக்யானந்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  அரையிறுதி போட்டியில் பிரக்யானந்தா, பேபியானோ கருவானா  என்பவரை எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
வெள்ளத்தை முன்கூட்டியே அறியும் செயலி.. மத்திய அரசு அறிமுகம்..!