1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (18:31 IST)

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

Rohit sharma Yuvraj singh
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா உலக கோப்பையை வெல்வதை காண விரும்புவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.



தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக ப்ளே ஆப் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. சமீபத்தில்தான் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் மும்பை இந்தியன்ஸுக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோரும் உள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல்லில் கடந்த சில போட்டிகளாக ரோஹித் சர்மா ஒற்றை இலக்க எண்களிலேயே அவுட்டாகி வருவதால் உலக கோப்பையில் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ரோஹித் சர்மாவால் உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியும் என சக கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பேசிய அவர் “ரோஹித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியம். அழுத்தமான சூல்நிலைகளில் தெளிவான முடிவுகளை எடுக்க கூடிய ரோஹித் சர்மா போன்ற நல்ல கேப்டன்கள் நமக்கு தேவை. கடந்த 2023 போட்டியில் இந்தியாவை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார். ஐபிஎல்லில் 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர்.

ரோஹித் சர்மாவை உலக கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன். உலக கோப்பை பதக்கத்தை அவர் அணிய வேண்டும். அதற்கு தகுதியானவர் அவர்தான்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K