ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (15:24 IST)

யோசனையே வேணாம்.. அவர்தான் டி20 இந்தியா டீம் விக்கெட் கீப்பர்! – கெவின் பீட்டர்சன் நம்பும் அந்த வீரர் யார்?

Kevin Peterson
உலகக்கோப்பை டி20 நெருங்கி வரும் நிலையில் இந்தியா அணியில் யார் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.



உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் தேர்வில் அனைத்து நாட்டு கிரிக்கெட் அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலிருந்து உலகக்கோப்பையில் பங்கேற்க போகும் வீரர்கள் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

தற்போது ஐபிஎல் டி20 போட்டியில் பல இந்திய ப்ளேயர்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் யாரை அணியில் எடுப்பது என்ற குழப்பமும் எழத் தொடங்கிவிட்டது. முக்கியமாக விக்கெட் கீப்பர் + பேட்டர் இடத்திற்கு கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், துருவ் ஜுரெல், ஜித்தேஷ் சர்மா, ரிஷப் பண்ட் என்று பெரிய அணிவகுப்பே உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை அணிக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை யோசிக்காமல் தேர்வு செய்ய வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து பேசிய அவர் “ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பண்ட் நன்றாக விளையாடி வருகிறார். குஜராத் அணிக்கு எதிரான வெற்றி அவருக்கு ஊக்கம் அளித்திருக்கிறது. காயங்களில் இருந்து குணமடைந்துள்ள அவருக்கு போட்டிகளில் விளையாட அவகாசம் தேவைப்பட்டது. உலகக்கோப்பை விளையாடுவதற்கு முன்பாக அவர் 14-17 போட்டிகளில் விளையாடுவது அவசியம். அதற்கு ஐபிஎல் அவருக்கு உதவுகிறது. அந்த வகையில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் அவரை அணியில் தேர்வு செய்ய இந்தியா யோசிக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K