திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 12 ஜனவரி 2023 (21:11 IST)

2nd ODI: இலங்கையை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்தது.

ஷனகா தலைமையிலான இங்கை அணியின் பெர்னாண்டோ 50 ரன்களும், மெண்டிஸ் 34 ரன்களும், டூனித் 32 ரன்களும் அடித்தனர்.

எனவே, இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன் கள் எடுத்து, இந்திய அணிக்கு 219 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணி சார்பில், சிராஜ் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 3 விக்கெட்டுகளும், உம்ரான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
 

இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணியின் கே.எல்.ராகுல் 64 ரன்களும், பாண்ட்யா 36 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களும் அடித்தனர்.

எனவே, 43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில்  இந்திய அணி வெற்றி பெற்றது.